💕 நிச்சயிக்கப்பட்ட பெண்ணும், வெளிநாட்டிலிருந்து வந்த வருங்கால மாப்பிளையும்💕
"உன்னவர்தான் தூரத்தில் வருகிறார் ஆம் அவர் உன்னுடையவர் தான்... என் இரண்டு கண்களினாலே பார்த்தேன் நீ வேணா வந்து பாரேன்" என்றாள் என் பக்கத்துவீட்டு தோழி. ✌👆🏼👍🤝👀👁
நானும் இதயம் படபடக்க, என்ன செய்வதென்றே தெரியாமல் பக்கத்தில் யார் நிற்கின்றார்கள் என்று கூட கவனிக்காமலும் ஓட்டமாய் ஒடினேன். .... ஆம் என்னவர்தான் ஆம் அவரே தான் அதே நடை, அதே சாந்தம், அதே கண்கள், அதே முகம் .... அதோ வந்துக்கொண்டிருக்கிறார்... ஐந்து நிமிடத்தில் இதோ வந்துவிடுவார். ஆ ஐயோ சந்தோஷம். .... நான் என்ன செய்வேன் தெரியலையே ....!😙😚😍
எத்தனை வேதனை, எவ்வளவு துக்கத்தை சகித்திருப்பேன். சீக்கிரமாக வந்துவிடுவேன், உன்னை எல்லோருக்கும் முன்பாக திருமணம் செய்வேன் என்று சொல்லிப்போனவர் இன்றும்தான் வருகிறார். 🙏💕💓
பக்கத்துவீட்டு தோழிகள் கூட சொன்னதுண்டு,😏😠😦🤔🙄 இன்னுமா உன் ஆளுக்காக காத்திருக்கிறாய் நிச்சயம் பண்ணி மூன்று வருஷம் ஆகிவிட்டது, வந்துவிடுவேன் என்று போனவர் இன்னும் வரவில்லை. நான் சொன்னேன் "எத்தனை வருஷம் ஆனாலும் சரி, நான் அவருக்காகதான், அவர் என்னுடையவர் தான் "👉👆🏼😀💃🏃♀🚶♀💑
இதோ அருகில் வந்துவிட்டார், நான் அவரை நோக்கி ஓடினேன், என் கண்களில் கண்ணீர் கொப்பளித்து, முகத்தை நனைத்தது. ஓடோடிபோய் அவரை பிடித்துக்கொண்டேன், அழுகை.... அழுகை... கண்ணீர் கண்ணீர் முகத்தை நினைத்தது. 😭😭😥😢😪😓
எங்களை சுற்றி யார் நிற்கிறார்கள் நாங்கள் அறியோம்.💕❤💓
💞✝வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.எபிரெயர் 10:37💞✝
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்;தேவனே,நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.சங்கீதம் 51:17
Showing posts with label கிறிஸ்தவ_சிறுகதைகள். Show all posts
Showing posts with label கிறிஸ்தவ_சிறுகதைகள். Show all posts
20 September 2020
அதோ... மணவாளன் வந்துக்கொண்டிருக்கிறார்!
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
பிசாசானவன் அக்கினியாஸ்திரத்தை வீசும்போதும்,பலவீதமான சோதனைகளின் வழியாக நாம் கடக்கும் போது தான், சொல்லிமுடியாத சந்தோஷத்தை விசுவாசப்பிள்ளைகளுக...
-
மீகா 2:2 வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையு...
-
வேதாகமம் ஒரு கண்ணோட்டம் நன்றி: சகோ. D.பாலச்சந்திரன் Bro.Yesudas Solomon http://wordofgod.in/