11 July 2020

கடவுள் /இறைவன் / தெய்வம் / பராபரன் /சுவாமி யார்?

மனிதர்களுக்கு அனுதினமும் பிரச்சனைகள்!!!  இவ்வுலகத்தில்  மனிதர்கள் அனுபவிக்கும்  வேதனைகளையும், துன்பங்களையும், அழுகுரலையும், மரணஓலத்தையும்,  நம்முடைய கஷ்டங்களை தாங்குபவர் யார் என்ற கதறல் சத்தத்தையும், நமக்கு ஆறுதலான வார்த்தையை தருபவர் யார் என்று ஏங்கும் இருதயத்தையும், எனக்கு நிம்மதியே வராதா என்று தவிக்கும் ஏக்கத்தையும், ஏழைகளின் பசியையையும், ஒடுக்கத்தையும், எப்போது விடியும் என்று காத்திருக்கும் கண்களையும், வயிற்றுக்காக அனுதினமும் பாரசுமப்பதையும்  இரக்கமுள்ள இறைவன்  கண்ணோக்கி பார்க்கவே பார்க்கிறார், காதுகளால் கேட்கிறார்.

இறைவனா? நம்மை கவனிக்கிறாரா? யார் அது? அவர் எப்படியிருப்பார்?  Really who God is? என்று நீங்கள் கேட்கலாம்.

இறைவன்  என்பவர் யார் , அந்த கடவுள் என்பவர் எப்படிப்பட்டவர்?! மனிதர்கள் அந்த  கடவுளை  அழைக்கும் பெயர்கள் பல -  இறைவன், பரமாத்மா, பரம்பொருள், ஒளி, ஆண்டவர், தேவன், தெய்வம், ஆண்டவர், சாமி....

கடவுள் எப்படிப்பட்டவர், அவர் யாரென்றும், அவர் எங்கிருக்கிறார் என்றும் பார்க்கலாம்.

கடவுளை பலப்பெயர்களில் அழைத்தாலும் , பல உருவங்களில்  வழிப்பட்டாலும்  அவர்  ஒருவராய் இருக்கிறார்.
அவர் இருக்கிறவராக இருக்கிறார், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்;
அவர் ஒளியாயிருக்கிறார், ஆவியாயிருக்கிறார்,அன்பாயிருக்கிறார், அதரிசமானவருமாயிருக்கிறார், ஆதியும் அந்தமும் இல்லாதவர்.  
வானங்களும் வானாதிவானங்களும் அவரைக் கொள்ளக்கூடாதிருக்க, அவரே வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர்!
அந்த அன்பான கடவுளே சகலத்தையும் படைத்தவர் - வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவர், அவரே  தூதர்களையும், சகலஜீவராசிகளையும், மனிதர்களையும் படைத்தவர்.
அந்த ஒரே காணக்கூடாத தேவன் தம்முடைய ஒரே குமாரன் மூலமாக தன்னை வெளிப்படுத்தினார், அவரின் குமாரனான இயேசுகிறிஸ்துவே ஆதிமுதலிலிருந்து தேவனோடுயிருந்தவர், தேவனாயிருந்தவர்.

-  மனிதர்களை பாவத்திலிருந்து விடுவிக்க இறைவன் தம்முடைய குமாரனை மனித  உருவெடுத்து மனிதமாம்சத்தில் வெளிப்படப்பண்ணினார் - அவரே இயேசுகிறிஸ்து!

- அண்ட சராசரங்களும் கொள்ளக்கூடாதவரும், வானாதிவானங்களையும், பூமியையையும் நிரப்புகிறவர் மனிதர்கள் மேல்வைத்த அளவற்ற அன்பினால், தம்முடைய குமாரனை மனுவுருவெடுக்க வைத்தார்.

- அவருடைய குமாரனான இயேசுகிறிஸ்து தம் மகிமையை இழந்து மனிதர்களுக்காக மனிதனானார், நம்முடைய துக்கத்தையும், வேதனையையையும் பார்த்து அவர்களுக்கு நிரந்தர சந்தோஷத்தையும், நித்திய வாழ்வையும் கொடுக்க பரலோகத்தை விட்டு,  மனிதர்களுக்கும், இறைதூதர்களுக்கும் காணப்படும்படி  இறைவனோடிருந்தவர் ,  இறைவனிடத்திலிருந்து இறங்கிவந்தார் - அவரே இயேசுகிறிஸ்து.

இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதலையும்,
சிறுமையானவர்களுக்கும்  ஆறுதலையையும், ,
பாவிகளை பாவத்திலிருந்து விடுதலையளிக்கவும்,
எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைக்கவும்,
மரணத்திலிருந்து  ஜெயத்தை கொடுக்கவும்,  
மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்படவும்,
 சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிக்கவும்,
 சிறுமைப்பட்டவனுக்குக் அவரே அடைக்கலமாகவும்,
நெருக்கப்படுகிறவர்களுக்கு அவரே தஞ்சமாகவும்,
 ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்யவும்,
 சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யவும்,
மறைவாயிருந்த மகிமை வெளிப்பட்டது ....
காணக்கூடாதவர் தம் குமாரன் மூலமாக காணப்பட்டார் .....

இந்த இயேசுகிறிஸ்துவினிடத்தில்  விசுவாசம் வைத்து, அவரிடம் உங்களுடைய பாவங்களை சொல்லி விட்டுவிட்டு, அவரோடு அனுதினமும் பேசி, நெருக்கமான உறவு வைத்திருந்தால் அவர் உங்களுக்கு சமாதானமும், சந்தோஷமும் கொடுப்பார். அவரே நம் இருதயத்தை பிராகாசிப்பவர், செத்த நம் வாழ்க்கைக்கு ஜீவனைத்தருகிறவர்,  வேதனையான, துக்கம்நிறைந்த நம் மனதுக்கு அவரே ஆறுதல் தருகிறவர்.

இறைவன் நம்மை படைத்ததின் நோக்கம் நாம் இந்த உலக வாழ்வை முடித்து, மண்ணோடு மண்ணாக மாறவேண்டுமென்பதற்க்காக அல்ல. நம்முடைய உலக வாழ்விற்க்கு பிறகு நமக்கு இன்னோரு அழியாத, இறைவனால் கட்டப்பட்ட புது உலகத்தையும், வானத்தையும்  வைத்திருக்கிறார் , அவரை விசுவாசித்து அவரோடு அனுதினமும் வாழ்பவர்கள்,  இறைவனால் உண்டுபண்ணின அந்த அழியாத நகரத்தில் நுழையமுடியும், அந்த புது  நகரத்தில் எப்போதும் தேவனோடு வாழ்வார்கள், சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

அங்கே இறைவன் தாமே நம்முடைய கண்ணீர் யாவையும் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை;அங்கே  நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

இந்த இறைவன் உங்களுக்கு தேவையா?  அவருடைய குமாரனை நோக்கி - இயேசுகிறிஸ்துவே நீர்  என் வாழ்க்கைக்கு தேவை என்று சொல்வோமா?

ஆண்டவர் இயேசுவை பார்த்தேன் - Shreemathi

  • ஐயங்கார் குடும்பத்திலிருந்து இயேசுவை ஏற்றுக்கொண்ட சகோதரி
  • இருளின் / பாதாளத்திலிருந்து விடுதலையாக்கிய இயேசுநாதர்
  • இயேசு மற்றவர்களுக்காக உயிரைக்கொடுத்தவர்
  • இயேசுவின் சிலுவை காட்சியை பார்த்தவர்
  • ஆண்டவர் இயேசுவின் அன்பை ருசித்தவர்
  • சபைக்கு எங்கே போகவேண்டும் என்று ஜெபித்தபோது, TPM சபையை தரிசனத்தில் காட்டிய ஆண்டவர் இயேசு
  • தோல் நோயை குணப்படுத்திய ஆண்டவர் இயேசு


*Sister Shreemathi | TPM Church | Testimony | Tamil | Divine Healing | IT Employee*

Please click this link - https://youtu.be/Syp_n2j80EI

Messages by Pastor Selvam - TPM Church

  • பிசாசானவன் அக்கினியாஸ்திரத்தை வீசும்போதும்,பலவீதமான சோதனைகளின் வழியாக நாம் கடக்கும் போது தான், சொல்லிமுடியாத சந்தோஷத்தை விசுவாசப்பிள்ளைகளுக்கு தேவன் தருகிறார்.
  • மரணமானலும், ஜீவனானாலும் சந்தோஷத்துடன் வாழ வேண்டும், கிறிஸ்துவின் அன்பை விட்டு பிரிந்து போகக்கூடாது
  • கானான் தேசம் - விசுவாச தேசம், விசுவாச ஆவியை உடையவர்கள். காலேபின் ஆவி இதுதான்...தேவனுடைய வசனத்தை இரவும், பகலும் தியானிக்கிற அனுபவத்தை பெற்றவர்களை ஒருவரும் ஒருக்காலும் எதிர்க்க முடியாது!
  • அத்தி என்பது சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பிக்கும் வல்லமை
  • அபிஷேகம் பெற்ற பிள்ளைகளை வியாதிகள் தாக்கலாம்..ஆனால் ஏன் தேவன் அனுமதிக்கிறார் என்றால் மரணமே உன் கூர் எங்கே...பாதாளமே உன் ஜெயம் எங்கே என்று நீ கெம்பீரிக்கவும் தேவன் அந்த வியாதியை அனுமதிக்கிறார்
  • உங்களிலே பரிசுத்த ஆவியானவர் வாசமாயிருந்தால் சாவுக்கேதுவான சரிரங்களை உயிர்ப்பிப்பார்...மரணத்தை அச்சுறுத்தி ஜீவனையும், அழியாமையும் உங்களுக்குள் உருவாக்குவார்...மரணத்தை பரிகரித்து உன்னை மகிமையினாலும், கனத்தினாலும் முடிச்சூட்டுவார்....
  • மன, ஆத்ம போரட்டத்தை தர பிசாசானவன் யாரை விழுங்கலாம் என்று சோதனைகளையும்,பிரச்சனைகளையும் கொண்டு வருகிறான்... என்னை விழுங்க சுற்றித்திரியும் அவனை, நானோ யூதா கோத்திரத்து சிங்கமாக அவனை விழுங்குவேன்
  • சபைக்கு விரோதமாக, மகிமைக்கு விரோதமாக, வருகைக்கு எழும்பும் பிசாசுக்கு நாம் சவால் விட வேண்டும்
  • ஒரு ஊழியர் வியாதியில் இருக்கும் போது... மற்றவர்கள் கேட்கும்போது அவர் இப்படி சொன்னாராம்... "யுதா கோத்திரத்து சிங்கம் இயேசுவாக எனக்குள் இருக்கிறார்"
  • ஒரு குழந்தையைப் போல தேவ வசனத்தை கேட்டவர்கள் பழைய மனுஷனை அழித்துப்போட்டார்கள்.....இதைப்போல நாமும் மாற வேண்டும்.
  • ஆவியினாலே நம் மாம்ச கிரியைகளை அழிக்க வேண்டும்.... அவைகளை அழிக்க தவறினால் அவைகள் உங்களை அழித்துவிடும்
  • அவர் மரணத்தை ஜெயமாக விழுங்கினது போல.... நமக்கும் மரணத்தை ஜெயமாக விழுங்க உதவி செய்கிறார்
  • ஆத்துமா ஈடேற நாம் விசுவாசிக்கிறவர்களாக இருப்போம்...
  • முற்றும் ஜெயங்கொள்கிறவர்களாக இருங்கள்... Be Overcomer
  • நாம் பெலத்தின் மேல் பெலன் அடைய அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடக்க வேண்டும்....
  • விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருக்க வேண்டும்....
  • உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.சங்கீதம் 84:5-7

Messages by Bro. Thomas - TPM church

  • தாவீது இரத்தம் சிந்தினவன் என்பதால் தேவன் அவனை ஆலயம் கட்ட அனுமதி கொடுக்கவில்லை. அவன் அனேகரின் இரத்தத்தை சிந்தியிருந்தான். அதுபோல புதிய ஏற்பாட்டில் தன் சகோதரனை பகைக்கிறவன் மனுஷ கொலைப்பாதகனாயிருக்கிறான், அப்படிப்பட்ட கொலைகாரன் ஒரு ஆலயமாக மாற முடியாது. சாலோமோன் என்றால் சமாதானத்தின் புருஷன்; எழுத்தின் படி ஒரு ஆலயம் கட்டவே ஒரு சமாதான புருஷனாக இருக்க வேண்டுமென்றால், பரலோகத்தில் ஆலயமாக மாறப்போகும் நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும்.
  • நீ பெரியவனா, நான் பெரியவனா என்று போட்டியிடுவதை விட; நீ சிறியவனா, நான் சிறியவனா என்று போட்டியிட வேண்டும், நீ பரிசுத்தவனா, நான் பரிசுத்தவானா என்று போட்டியிட வேண்டும், எல்லாவற்றிலும் தாழ்மையையும், தேவ அன்பையும் வெளிப்படுத்த வேண்டும்.
  • ஒவ்வொரு பிறந்த நாளிலும் நாம் நினைக்க வேண்டியது இன்னும் எனக்கு வாழ்நாள் எத்தனை வருஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதற்க்குள் நான் பரிசுத்தமாக வேண்டுமே என்ற வாஞ்சை வேண்டும்.

Quotes by John Bunyan

The best prayers have often more groans than words.

In prayer, it is better to have a heart without words than words without a heart.

No man, without trials and temptations, can attain a true understanding of the Holy Scriptures.

Temptations, when we meet them at first, are as the lion that roared upon Samson; but if we overcome them, the next time we see them we shall find a nest of honey within them.

The difference between true and false repentance lies in this: the man who truly repents cries out against his heart; but the other, as Eve, against the serpent, or something else

One leak will sink a ship, and one sin will destroy a sinner.

Whatever contradicts the Word of God should be instantly resisted as diabolical.

The spirit of prayer is more precious than treasures of gold and silver.

Great grace and small gifts are better than great gifts and no grace.

What God says is best, is best, though all the men in the world are against it.

Hope is never ill when faith is well.

Pray often, for prayer is a shield to the soul, a sacrifice to God, and a scourge for Satan.


Saint abroad, and a devil at home.

Messages by pastor T.U Thomas - TPM Church

  • மிகச் சிறந்ததாத இல்லாத எல்லாவற்றையும் வெறுத்து தள்ளிவிட்டு, மிக சிறந்தவற்றையே தேர்ந்தெடுத்து, அதை வாஞ்சித்து, அப்படிப்பட்ட காரியங்களை செய்வதே ஆவிக்குரிய முதிர்ச்சி.
  • "கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்."
  • எகிப்த்தின் பொக்கிஷத்தை விட, கிறிஸ்துவின் நிமித்தம் வரும் பாடுகளையே மோசே தெரிந்துக்கொண்டார்.
  • நம்முடைய மிகவும் மோசமான எதிரியை நாம் எந்தளவு நேசிக்கிறோமோ அந்தளவு நாம் இயேசுவை நேசிக்கிறோம். How much you love your worst enemy that much you love Lord Jesus.
  • நமக்கு யார் யாரெல்லாம் கடினமாக இருக்கிறார்களென்று தெரிகிறதோ,உண்மையில் அவர்கள் கடினமாக இல்லை.... நம் இருதயமே கடினமாக இருக்கிறது.
  • நீங்கள் யாரிடமாவது பேச விருப்பமில்லாமல் கடினமாகஇருப்பீர்களென்றால் நீங்கள் ஆண்டவர் இயேசுவிடம் பேச கடினமாக இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
  • இதனை இப்படியும் அர்த்தப்படுத்தலாம் அதாவது நாம் பிறர்மேல் வைத்திருக்கும் கசப்பு என்பது இயேசுவோடு கசப்பு வைத்திருக்கிறோம், நாம் பிறரை சபித்தல் என்பது இயேசுவை சபித்தலாகும்.
  • "இந்த சிறியருக்கு நீங்கள் எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்."
  • அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.யாக்கோபு 3:9
  • பிறர் நம்மை நேசித்தாலும், நேசியாமல் போனாலும், பிறரை தொடர்ந்து நேசிக்கும் அன்பே இயேசு கிறிஸ்துவின் அன்பு. 
  •  "அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தார்..."
  • நீ ஒரு பிரச்சனையைக் கண்டு ஓடிப்போகிறவனாக இருப்பாயானால், நீ தேவ சித்தத்தை விட்டு விலகி ஓடுகிறாய் என்றே அர்த்தம்.
  • The heart of the problem is the center of the heart or The heart of the problem is the problem of heart!
  • "உன் பிரச்சனை என்பது வெளியே அல்ல, உனக்கு உள்ளேயே தான்"
  • When you run away from problem your heart will become hard/bitter like Nagomi.
  • நம் இருதயத்தை மாற்றாமல், நாம் பிரச்சனையிலிருந்து ஓடக்கூடாது.
  • எப்பொழுது உங்களுக்கு அது தேவை இது தேவை என்று நினைக்கிறீர்களோ, எதிர்ப்பார்க்கின்றீர்களோ அப்பொழுது அந்த பொருட்களோ இல்லாமல் வாழக்கூடிய ஆவிக்குரிய முதிர்ச்சி தேவையாய் நமக்கு இருக்கிறது.
  • முதலில்நமது அவசிய பிரச்சனை அல்லது தேவை உலகத்துக்குரியது அல்ல, ஆவிக்குரியது.
  • நாம் அநேக நாட்களை உலக காரியத்திற்க்காக ஜெபித்து, நேரத்தை வீணாய் கழிக்கிறோம். ஆனால் நாம் தேட வேண்டியது ஆவிக்குரிய தேவையை மட்டுமே. Matthew 6:33
  • நம்மை யாராவது சட்டை செய்தார்களானால் , நாம் வருந்துகிறோம் ஆனால் நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் ஏற்கனவே பிறர் எவரையாவது நாம் வேறு எந்த சூழ்நிலையிலேயோ அசட்டை செய்திருப்பதால் தேவன் இந்த சூழலை அனுமதிக்கிறார் என்று உணர வேண்டும்.
  • நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மனவியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.ஆதியாகமம் 42:21
  • தேவன் நம்மை நேசிப்பது சமுத்திர அளவு போன்றது, நாம் தேவனை நேசிப்பது சமுத்திரத்தின் ஒரு துளியைப்போன்றது.
  • இந்த உலகத்தில் நாம் தேவனோடு நெருங்கி வாழ்ந்தால் பரலோகத்திலும் தேவனோடு நெருங்கி வாழ்வோம்.இந்த உலகத்தில் நாம் தேவனோடு தூரமாக வாழ்ந்தால் பரலோகத்திலும் தேவனோடு தூரமாக வாழ்வோம்.
  • நம் திருமண வாழ்க்கை நரகம் போல் தோன்றினால் நம் நாவு நரகமாக இருக்கிறது என்று அர்த்தம்.
  • ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்க்கு பின்பும் ஒரு சோதனை உங்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது...
  • ( வானம் திறக்கப்பட்டது.... இயேசு கிறிஸ்துவுக்கு சாத்தானின் சோதனை .... )
  • ( சத்துருக்களின் மேல் ஜெயங்கொண்டிருந்தான் தாவீது... பின்பு பட்சேபாளின் இச்சையில் விழுந்தான்)
  • ( எகிப்திலிருந்து விடுதலையான பிறகு, சிவந்த சமுத்திர ஆபத்து முன்னாக இருந்தது)
  • அந்தகார இருள் நிலையை உங்கள் வாழ்வில் தேவன் அனுமதித்தால்.. அந்த அந்தகாரத்தில் ஒரு ஆசீர்வாதத்தை நீங்கள் கண்டுகொள்ளும்படியாகவே அதை வைத்திருக்கிறார் என்பது நிச்சயம்.
  • நாம் நம் தேவைகளுக்கு பிடிவாதமாக கதறியழாத பட்சத்தில் தேவனும் நம் ஜெபத்தை அசட்டையாக கவனிக்காமல் போய் விடுவிடுவார். ( பர்திமேயு தாவீதின் குமரனே எனக்கு இரங்கும்)
  • தேவன் நம் ஜெபங்களுக்கு பதிலளிக்கவில்லையானாலும், நம் கண்ணீருக்கு நிச்சயம் பதில் தருவார். நம் பிள்ளைகள் கண்ணீர் வடித்தால் பெற்றோர் இருதயம் இலகிவிடும், நம் இருதயத்தை பார்க்கிலும் தேவனுடைய இருதயம் மிகவும் மிருதுவான இருதயம்.
  • நம் கண்ணீரை பூலோக தேவைகளுக்காக சிந்தாமல், நம்முடைய சுபாவ மாற்றத்திற்க்காக சிந்த வேண்டும்.
  • ஆரம்பத்தில் நாம் கண்ணீர் சிந்தும்போது அநேக பிரச்சனை வரலாம் ஆனால் இன்னும் அதிகமாக கண்ணீர் சிந்த வேண்டும்...கர்த்தர் கேட்பார்.
  • ஆயக்காரன், பரிச்சேயன் ஜெபத்தில் ஆயக்காரன் மார்பில் அடித்து அழுதான்.. பரிசேயன் அழவில்லை... நாமும் அழவில்லை என்றால் நாமும் பரிச்சேயன் போல கடினஇதயம் கொண்ட மனிதர்களே.
  • பெருமையுள்ள மனிதர்களால் அழ முடியாது..அவர்கள் இருதயம் கடினப்பட்டிருக்கும்...
  • தேவ சமூகத்தில் அழுகை என்பது பலவீனம் அல்ல... அது பலம். தாழ்மையுள்ள மக்கள் மட்டுமே அழமுடியும்.
  • இனி நீங்கள் வியாதி குணமாக வேண்டும் என்று ஜெபம் பண்ணாதீர்கள், உங்களின் சுபாவ மாற்றத்திற்க்காக ஜெபம் செய்துக்கொள்ளுங்கள்.
  • தேவன் உன்னை ஆஸ்தியினால், சமார்த்தியத்தினால், ஞானத்தினால், பெலத்தினால் நடத்தமாட்டார்... உன் இருதயத்தின் உத்தமத்தின் படியே உன்னை நடத்துவார்! நீதிமொழிகள் 11:3
  • தேவன் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் செய்யக்கூடிய பெரிய வேலை என்னவென்றால் அவன் மனதை தூய்மைப்படுத்துவது தான்!
  • சத்தியத்திற்க்காக நாம் உயிரைக் கொடுக்கவும் தயங்கக்கூடாது.
  • 1 நாள் ஆண்டவருக்கு பிரியமாக வாழவேண்டும், 1000 நாளும் எப்படியோ வாழ்ந்து கழிப்பதை விட!
  • ஆவிக்குரியவனுக்கு தூங்கி விழிக்கும்போது ஜெபித்து விட்டு எழுவது போல இருக்கும், தூக்கம் கூட ஒரு வகை ஜெபமாக தான் இருக்க வேண்டும் ஆவிக்குரியவனுக்கு!

Popular Posts