- மிகச் சிறந்ததாத இல்லாத எல்லாவற்றையும் வெறுத்து தள்ளிவிட்டு, மிக சிறந்தவற்றையே தேர்ந்தெடுத்து, அதை வாஞ்சித்து, அப்படிப்பட்ட காரியங்களை செய்வதே ஆவிக்குரிய முதிர்ச்சி.
- "கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்."
- எகிப்த்தின் பொக்கிஷத்தை விட, கிறிஸ்துவின் நிமித்தம் வரும் பாடுகளையே மோசே தெரிந்துக்கொண்டார்.
- நம்முடைய மிகவும் மோசமான எதிரியை நாம் எந்தளவு நேசிக்கிறோமோ அந்தளவு நாம் இயேசுவை நேசிக்கிறோம். How much you love your worst enemy that much you love Lord Jesus.
- நமக்கு யார் யாரெல்லாம் கடினமாக இருக்கிறார்களென்று தெரிகிறதோ,உண்மையில் அவர்கள் கடினமாக இல்லை.... நம் இருதயமே கடினமாக இருக்கிறது.
- நீங்கள் யாரிடமாவது பேச விருப்பமில்லாமல் கடினமாகஇருப்பீர்களென்றால் நீங்கள் ஆண்டவர் இயேசுவிடம் பேச கடினமாக இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
- இதனை இப்படியும் அர்த்தப்படுத்தலாம் அதாவது நாம் பிறர்மேல் வைத்திருக்கும் கசப்பு என்பது இயேசுவோடு கசப்பு வைத்திருக்கிறோம், நாம் பிறரை சபித்தல் என்பது இயேசுவை சபித்தலாகும்.
- "இந்த சிறியருக்கு நீங்கள் எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்."
- அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.யாக்கோபு 3:9
- பிறர் நம்மை நேசித்தாலும், நேசியாமல் போனாலும், பிறரை தொடர்ந்து நேசிக்கும் அன்பே இயேசு கிறிஸ்துவின் அன்பு.
- "அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தார்..."
- நீ ஒரு பிரச்சனையைக் கண்டு ஓடிப்போகிறவனாக இருப்பாயானால், நீ தேவ சித்தத்தை விட்டு விலகி ஓடுகிறாய் என்றே அர்த்தம்.
- The heart of the problem is the center of the heart or The heart of the problem is the problem of heart!
- "உன் பிரச்சனை என்பது வெளியே அல்ல, உனக்கு உள்ளேயே தான்"
- When you run away from problem your heart will become hard/bitter like Nagomi.
- நம் இருதயத்தை மாற்றாமல், நாம் பிரச்சனையிலிருந்து ஓடக்கூடாது.
- எப்பொழுது உங்களுக்கு அது தேவை இது தேவை என்று நினைக்கிறீர்களோ, எதிர்ப்பார்க்கின்றீர்களோ அப்பொழுது அந்த பொருட்களோ இல்லாமல் வாழக்கூடிய ஆவிக்குரிய முதிர்ச்சி தேவையாய் நமக்கு இருக்கிறது.
- முதலில்நமது அவசிய பிரச்சனை அல்லது தேவை உலகத்துக்குரியது அல்ல, ஆவிக்குரியது.
- நாம் அநேக நாட்களை உலக காரியத்திற்க்காக ஜெபித்து, நேரத்தை வீணாய் கழிக்கிறோம். ஆனால் நாம் தேட வேண்டியது ஆவிக்குரிய தேவையை மட்டுமே. Matthew 6:33
- நம்மை யாராவது சட்டை செய்தார்களானால் , நாம் வருந்துகிறோம் ஆனால் நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் ஏற்கனவே பிறர் எவரையாவது நாம் வேறு எந்த சூழ்நிலையிலேயோ அசட்டை செய்திருப்பதால் தேவன் இந்த சூழலை அனுமதிக்கிறார் என்று உணர வேண்டும்.
- நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மனவியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.ஆதியாகமம் 42:21
- தேவன் நம்மை நேசிப்பது சமுத்திர அளவு போன்றது, நாம் தேவனை நேசிப்பது சமுத்திரத்தின் ஒரு துளியைப்போன்றது.
- இந்த உலகத்தில் நாம் தேவனோடு நெருங்கி வாழ்ந்தால் பரலோகத்திலும் தேவனோடு நெருங்கி வாழ்வோம்.இந்த உலகத்தில் நாம் தேவனோடு தூரமாக வாழ்ந்தால் பரலோகத்திலும் தேவனோடு தூரமாக வாழ்வோம்.
- நம் திருமண வாழ்க்கை நரகம் போல் தோன்றினால் நம் நாவு நரகமாக இருக்கிறது என்று அர்த்தம்.
- ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்க்கு பின்பும் ஒரு சோதனை உங்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது...
- ( வானம் திறக்கப்பட்டது.... இயேசு கிறிஸ்துவுக்கு சாத்தானின் சோதனை .... )
- ( சத்துருக்களின் மேல் ஜெயங்கொண்டிருந்தான் தாவீது... பின்பு பட்சேபாளின் இச்சையில் விழுந்தான்)
- ( எகிப்திலிருந்து விடுதலையான பிறகு, சிவந்த சமுத்திர ஆபத்து முன்னாக இருந்தது)
- அந்தகார இருள் நிலையை உங்கள் வாழ்வில் தேவன் அனுமதித்தால்.. அந்த அந்தகாரத்தில் ஒரு ஆசீர்வாதத்தை நீங்கள் கண்டுகொள்ளும்படியாகவே அதை வைத்திருக்கிறார் என்பது நிச்சயம்.
- நாம் நம் தேவைகளுக்கு பிடிவாதமாக கதறியழாத பட்சத்தில் தேவனும் நம் ஜெபத்தை அசட்டையாக கவனிக்காமல் போய் விடுவிடுவார். ( பர்திமேயு தாவீதின் குமரனே எனக்கு இரங்கும்)
- தேவன் நம் ஜெபங்களுக்கு பதிலளிக்கவில்லையானாலும், நம் கண்ணீருக்கு நிச்சயம் பதில் தருவார். நம் பிள்ளைகள் கண்ணீர் வடித்தால் பெற்றோர் இருதயம் இலகிவிடும், நம் இருதயத்தை பார்க்கிலும் தேவனுடைய இருதயம் மிகவும் மிருதுவான இருதயம்.
- நம் கண்ணீரை பூலோக தேவைகளுக்காக சிந்தாமல், நம்முடைய சுபாவ மாற்றத்திற்க்காக சிந்த வேண்டும்.
- ஆரம்பத்தில் நாம் கண்ணீர் சிந்தும்போது அநேக பிரச்சனை வரலாம் ஆனால் இன்னும் அதிகமாக கண்ணீர் சிந்த வேண்டும்...கர்த்தர் கேட்பார்.
- ஆயக்காரன், பரிச்சேயன் ஜெபத்தில் ஆயக்காரன் மார்பில் அடித்து அழுதான்.. பரிசேயன் அழவில்லை... நாமும் அழவில்லை என்றால் நாமும் பரிச்சேயன் போல கடினஇதயம் கொண்ட மனிதர்களே.
- பெருமையுள்ள மனிதர்களால் அழ முடியாது..அவர்கள் இருதயம் கடினப்பட்டிருக்கும்...
- தேவ சமூகத்தில் அழுகை என்பது பலவீனம் அல்ல... அது பலம். தாழ்மையுள்ள மக்கள் மட்டுமே அழமுடியும்.
- இனி நீங்கள் வியாதி குணமாக வேண்டும் என்று ஜெபம் பண்ணாதீர்கள், உங்களின் சுபாவ மாற்றத்திற்க்காக ஜெபம் செய்துக்கொள்ளுங்கள்.
- தேவன் உன்னை ஆஸ்தியினால், சமார்த்தியத்தினால், ஞானத்தினால், பெலத்தினால் நடத்தமாட்டார்... உன் இருதயத்தின் உத்தமத்தின் படியே உன்னை நடத்துவார்! நீதிமொழிகள் 11:3
- தேவன் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் செய்யக்கூடிய பெரிய வேலை என்னவென்றால் அவன் மனதை தூய்மைப்படுத்துவது தான்!
- சத்தியத்திற்க்காக நாம் உயிரைக் கொடுக்கவும் தயங்கக்கூடாது.
- 1 நாள் ஆண்டவருக்கு பிரியமாக வாழவேண்டும், 1000 நாளும் எப்படியோ வாழ்ந்து கழிப்பதை விட!
- ஆவிக்குரியவனுக்கு தூங்கி விழிக்கும்போது ஜெபித்து விட்டு எழுவது போல இருக்கும், தூக்கம் கூட ஒரு வகை ஜெபமாக தான் இருக்க வேண்டும் ஆவிக்குரியவனுக்கு!