மனிதர்களுக்கு அனுதினமும் பிரச்சனைகள்!!! இவ்வுலகத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் வேதனைகளையும், துன்பங்களையும், அழுகுரலையும், மரணஓலத்தையும், நம்முடைய கஷ்டங்களை தாங்குபவர் யார் என்ற கதறல் சத்தத்தையும், நமக்கு ஆறுதலான வார்த்தையை தருபவர் யார் என்று ஏங்கும் இருதயத்தையும், எனக்கு நிம்மதியே வராதா என்று தவிக்கும் ஏக்கத்தையும், ஏழைகளின் பசியையையும், ஒடுக்கத்தையும், எப்போது விடியும் என்று காத்திருக்கும் கண்களையும், வயிற்றுக்காக அனுதினமும் பாரசுமப்பதையும் இரக்கமுள்ள இறைவன் கண்ணோக்கி பார்க்கவே பார்க்கிறார், காதுகளால் கேட்கிறார்.
இறைவனா? நம்மை கவனிக்கிறாரா? யார் அது? அவர் எப்படியிருப்பார்? Really who God is? என்று நீங்கள் கேட்கலாம்.
இறைவன் என்பவர் யார் , அந்த கடவுள் என்பவர் எப்படிப்பட்டவர்?! மனிதர்கள் அந்த கடவுளை அழைக்கும் பெயர்கள் பல - இறைவன், பரமாத்மா, பரம்பொருள், ஒளி, ஆண்டவர், தேவன், தெய்வம், ஆண்டவர், சாமி....
கடவுள் எப்படிப்பட்டவர், அவர் யாரென்றும், அவர் எங்கிருக்கிறார் என்றும் பார்க்கலாம்.
கடவுளை பலப்பெயர்களில் அழைத்தாலும் , பல உருவங்களில் வழிப்பட்டாலும் அவர் ஒருவராய் இருக்கிறார்.
அவர் இருக்கிறவராக இருக்கிறார், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்;
அவர் ஒளியாயிருக்கிறார், ஆவியாயிருக்கிறார்,அன்பாயிருக்கிறார், அதரிசமானவருமாயிருக்கிறார், ஆதியும் அந்தமும் இல்லாதவர்.
வானங்களும் வானாதிவானங்களும் அவரைக் கொள்ளக்கூடாதிருக்க, அவரே வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர்!
அந்த அன்பான கடவுளே சகலத்தையும் படைத்தவர் - வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவர், அவரே தூதர்களையும், சகலஜீவராசிகளையும், மனிதர்களையும் படைத்தவர்.
அந்த ஒரே காணக்கூடாத தேவன் தம்முடைய ஒரே குமாரன் மூலமாக தன்னை வெளிப்படுத்தினார், அவரின் குமாரனான இயேசுகிறிஸ்துவே ஆதிமுதலிலிருந்து தேவனோடுயிருந்தவர், தேவனாயிருந்தவர்.
- மனிதர்களை பாவத்திலிருந்து விடுவிக்க இறைவன் தம்முடைய குமாரனை மனித உருவெடுத்து மனிதமாம்சத்தில் வெளிப்படப்பண்ணினார் - அவரே இயேசுகிறிஸ்து!
- அண்ட சராசரங்களும் கொள்ளக்கூடாதவரும், வானாதிவானங்களையும், பூமியையையும் நிரப்புகிறவர் மனிதர்கள் மேல்வைத்த அளவற்ற அன்பினால், தம்முடைய குமாரனை மனுவுருவெடுக்க வைத்தார்.
- அவருடைய குமாரனான இயேசுகிறிஸ்து தம் மகிமையை இழந்து மனிதர்களுக்காக மனிதனானார், நம்முடைய துக்கத்தையும், வேதனையையையும் பார்த்து அவர்களுக்கு நிரந்தர சந்தோஷத்தையும், நித்திய வாழ்வையும் கொடுக்க பரலோகத்தை விட்டு, மனிதர்களுக்கும், இறைதூதர்களுக்கும் காணப்படும்படி இறைவனோடிருந்தவர் , இறைவனிடத்திலிருந்து இறங்கிவந்தார் - அவரே இயேசுகிறிஸ்து.
இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதலையும்,
சிறுமையானவர்களுக்கும் ஆறுதலையையும், ,
பாவிகளை பாவத்திலிருந்து விடுதலையளிக்கவும்,
எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைக்கவும்,
மரணத்திலிருந்து ஜெயத்தை கொடுக்கவும்,
மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்படவும்,
சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிக்கவும்,
சிறுமைப்பட்டவனுக்குக் அவரே அடைக்கலமாகவும்,
நெருக்கப்படுகிறவர்களுக்கு அவரே தஞ்சமாகவும்,
ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்யவும்,
சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யவும்,
மறைவாயிருந்த மகிமை வெளிப்பட்டது ....
காணக்கூடாதவர் தம் குமாரன் மூலமாக காணப்பட்டார் .....
இந்த இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசம் வைத்து, அவரிடம் உங்களுடைய பாவங்களை சொல்லி விட்டுவிட்டு, அவரோடு அனுதினமும் பேசி, நெருக்கமான உறவு வைத்திருந்தால் அவர் உங்களுக்கு சமாதானமும், சந்தோஷமும் கொடுப்பார். அவரே நம் இருதயத்தை பிராகாசிப்பவர், செத்த நம் வாழ்க்கைக்கு ஜீவனைத்தருகிறவர், வேதனையான, துக்கம்நிறைந்த நம் மனதுக்கு அவரே ஆறுதல் தருகிறவர்.
இறைவன் நம்மை படைத்ததின் நோக்கம் நாம் இந்த உலக வாழ்வை முடித்து, மண்ணோடு மண்ணாக மாறவேண்டுமென்பதற்க்காக அல்ல. நம்முடைய உலக வாழ்விற்க்கு பிறகு நமக்கு இன்னோரு அழியாத, இறைவனால் கட்டப்பட்ட புது உலகத்தையும், வானத்தையும் வைத்திருக்கிறார் , அவரை விசுவாசித்து அவரோடு அனுதினமும் வாழ்பவர்கள், இறைவனால் உண்டுபண்ணின அந்த அழியாத நகரத்தில் நுழையமுடியும், அந்த புது நகரத்தில் எப்போதும் தேவனோடு வாழ்வார்கள், சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.
அங்கே இறைவன் தாமே நம்முடைய கண்ணீர் யாவையும் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை;அங்கே நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.
இந்த இறைவன் உங்களுக்கு தேவையா? அவருடைய குமாரனை நோக்கி - இயேசுகிறிஸ்துவே நீர் என் வாழ்க்கைக்கு தேவை என்று சொல்வோமா?
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்;தேவனே,நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.சங்கீதம் 51:17
Popular Posts
-
பிசாசானவன் அக்கினியாஸ்திரத்தை வீசும்போதும்,பலவீதமான சோதனைகளின் வழியாக நாம் கடக்கும் போது தான், சொல்லிமுடியாத சந்தோஷத்தை விசுவாசப்பிள்ளைகளுக...
-
மீகா 2:2 வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையு...
-
வேதாகமம் ஒரு கண்ணோட்டம் நன்றி: சகோ. D.பாலச்சந்திரன் Bro.Yesudas Solomon http://wordofgod.in/