Showing posts with label விவாகம். Show all posts
Showing posts with label விவாகம். Show all posts

23 August 2020

தமிழ் கிறிஸ்தவ இலவச புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய

 தமிழ் கிறிஸ்தவ இலவச புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய

 

நன்றி: 

Bro.Yesudas Solomon
http://wordofgod.in/

நிச்சயிக்கப்பட்ட பெண்ணும், வெளிதேசத்திலிருந்து வரும் வருங்கால மாப்பிளையும்...

"உன்னவர்தான்  தூரத்தில் வருகிறார் ஆம் அவர் உன்னுடையவர் தான்... என் இரண்டு கண்களினாலே பார்த்தேன் நீ வேணா வந்து பாரேன்"  என்றாள் என்  பக்கத்துவீட்டு  தோழி.

நானும் இதயம் படபடக்க, என்ன செய்வதென்றே தெரியாமல் பக்கத்தில் யார் நிற்கின்றார்கள் என்று கூட  கவனிக்காமலும் ஓட்டமாய் ஒடினேன். .... ஆம் என்னவர்தான் ஆம் அவரே தான் அதே நடை, அதே சாந்தம், அதே கண்கள், அதே முகம் .... அதோ வந்துக்கொண்டிருக்கிறார்... ஐந்து நிமிடத்தில் இதோ வந்துவிடுவார். ஆ ஐயோ சந்தோஷம். .... நான் என்ன செய்வேன் தெரியலையே ....

எத்தனை வேதனை, எவ்வளவு துக்கத்தை சகித்திருப்பேன். சீக்கிரமாக வந்துவிடுவேன்,  உன்னை எல்லோருக்கும்  முன்பாக திருமணம் செய்வேன் என்று சொல்லிப்போனவர் இன்றும்தான் வருகிறார்.

பக்கத்துவீட்டு தோழிகள் கூட சொன்னதுண்டு, இன்னுமா உன் ஆளுக்காக காத்திருக்கிறாய் நிச்சயம் பண்ணி மூன்று வருஷம் ஆகிவிட்டது, வந்துவிடுவேன் என்று போனவர் இன்னும் வரவில்லை. நான் சொன்னேன் "எத்தனை  வருஷம் ஆனாலும் சரி, நான் அவருக்காகதான், அவர் என்னுடையவர் தான் "

இதோ அருகில் வந்துவிட்டார், நான் அவரை நோக்கி ஓடினேன், என் கண்களில் கண்ணீர் கொப்பளித்து, முகத்தை நனைத்தது. ஓடோடிபோய் அவரை பிடித்துக்கொண்டேன், அழுகை.... அழுகை...  கண்ணீர் கண்ணீர்  முகத்தை நினைத்தது.

எங்களை சுற்றி யார் நிற்கிறார்கள் நாங்கள் அறியோம்!!!

200 முறை தற்கொலைக்கு முயற்ச்சித்து சாகாதவரின் சாட்சி - PDF download link

புத்தகத்தின் பெயர் - கண்ணீரின் பாதையில் வெற்றி

ஆசிரியர் - சகோதரி மார்கிரெட் ஸ்திரா

புத்தகத்தின் வகை - சாட்சி

ஆசிரியரிடத்தில் பிடித்தது - தேவனோடு நெருங்கிய தொடர்பும், கணவனிடம் அன்பையும் காட்டியது

சிறப்பு - படித்தால் நிச்சயம் உங்களுக்கும் கண்ணீர் வரும். நான் அழுதுக்கொண்டே படித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.

புத்தகத்தில் படித்ததில் பிடித்தது -

  • இந்துவாக பிறந்து, பொய்யான கல்லையும், மண்ணையும் வணங்குவதை விட்டு, மெய்யான தெய்வமான இயேசுவை அறிந்துக்கொண்டது
  • ஆண்டவர் இயேசு வியாதிலிருந்து சுகம் தந்தார்
  •  வேலையில் ஆசீர்வாதம் தந்தார்
  • திருமணத்தை ஆண்டவர் உறுதி செய்தல்
  • கணவனை மிகவும் கனம் செய்தார், கணவனை நேசித்தார், கணவனுக்கு கீழ்ப்படிந்தார்
  • ஆசிரியரின் ஜெபவாழ்க்கை மிகவும் அருமை
  • ஜெபத்தில் இயேசு பேசினார்
  • இரட்சிக்கப்படாத கணவரோடு ஆண்டவர் இயேசு பேசுவது
  • 200 தடவைக்கு மேலாக தற்கொலைக்கு முயற்ச்சித்தும், இயேசுகிறிஸ்துவின் கிருபையினால் சாகாத கணவர். 
  •  இன்னும் பல

முழு புத்தகத்தையும் படிக்க கிளிக் செய்யவும் 

 

நன்றி:
 

சகோதரி மார்கிரெட் ஸ்திரா
Bro. Yesudas Solomon
http://wordofgod.in/

Popular Posts