Showing posts with label வாலிபனே உனக்காக. Show all posts
Showing posts with label வாலிபனே உனக்காக. Show all posts

23 August 2020

இயேசுநாதரை இப்பூமிக்கு அனுப்பின கடவுளின் நோக்கம் என்ன?

 கிறிஸ்துவம் என்றால் என்ன? இயேசு கிறிஸ்து பூமிக்கு பிதாவால் அனுப்பப்பட்டார், பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி முடித்தார்.

தேவனின் நோக்கம் - ஒரே மந்தையும், மனிதர்களின் ஏகசிந்தையும், அவர்களில் தேவமகிமையும் உருவாக்கவே.
அவரை தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கடவுள் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
...
அவர்கள் நிலையோ மிகவும் பரிதாபமாகயிருந்தது இப்படி.....
""கடவுள் இல்லை என்று மதிகெட்டவர்கள் தங்கள் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள், நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன்இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள், அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது,

அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது,
அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது,
சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்,
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை!
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி நின்றார்கள்!""
கடவுள் கதறினார், ஐயோ! ஐயோ! நான் இவர்களை செம்மையானவர்களாக படைத்தேனே! இவர்களோ அநேக உபாயதந்திரங்களை தேடிக்கொண்டார்களே!

யோசித்தார், யோசித்தார். என்ன செய்ய இப்படி கெட்டுப்போன மனிதர்களை?!அப்போழுது, அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போலிருந்த, நம்ம இயேசப்பா தான், கடவுளுக்கு ஞாபகமாக வந்தாங்க!

"பிதாவே! பிதாவே! உம் சித்தம் செய்யவே, நான் உம்மோடு இருக்கிறேன்! நீர் எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ?, இப்போதிருக்கிற, நீர் எனக்குத் தந்த மகிமையைக்கூட இழந்து, என்னையே வெறுமையாக்கி அடிமை ரூபமெடுக்க இப்போதே தயார்" என்றார்.
கடவுள் சொன்னார் இப்படி " இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன், என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்."

பாவிகளை காப்பாற்ற கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது.
நாம் இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
நம்ம இயேசப்பா பூமியிலயிருக்கும்போது, பிதாவிடம் நமக்காக இப்படி ஜெபித்தாங்க!

"ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்."

இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையிலே காத்திருக்கிறோம்.
தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன், மரணபரியந்தம் நம்மை நடத்துவார். அப்படியே ஆகட்டும்!

11 July 2020

கடவுள் /இறைவன் / தெய்வம் / பராபரன் /சுவாமி யார்?

மனிதர்களுக்கு அனுதினமும் பிரச்சனைகள்!!!  இவ்வுலகத்தில்  மனிதர்கள் அனுபவிக்கும்  வேதனைகளையும், துன்பங்களையும், அழுகுரலையும், மரணஓலத்தையும்,  நம்முடைய கஷ்டங்களை தாங்குபவர் யார் என்ற கதறல் சத்தத்தையும், நமக்கு ஆறுதலான வார்த்தையை தருபவர் யார் என்று ஏங்கும் இருதயத்தையும், எனக்கு நிம்மதியே வராதா என்று தவிக்கும் ஏக்கத்தையும், ஏழைகளின் பசியையையும், ஒடுக்கத்தையும், எப்போது விடியும் என்று காத்திருக்கும் கண்களையும், வயிற்றுக்காக அனுதினமும் பாரசுமப்பதையும்  இரக்கமுள்ள இறைவன்  கண்ணோக்கி பார்க்கவே பார்க்கிறார், காதுகளால் கேட்கிறார்.

இறைவனா? நம்மை கவனிக்கிறாரா? யார் அது? அவர் எப்படியிருப்பார்?  Really who God is? என்று நீங்கள் கேட்கலாம்.

இறைவன்  என்பவர் யார் , அந்த கடவுள் என்பவர் எப்படிப்பட்டவர்?! மனிதர்கள் அந்த  கடவுளை  அழைக்கும் பெயர்கள் பல -  இறைவன், பரமாத்மா, பரம்பொருள், ஒளி, ஆண்டவர், தேவன், தெய்வம், ஆண்டவர், சாமி....

கடவுள் எப்படிப்பட்டவர், அவர் யாரென்றும், அவர் எங்கிருக்கிறார் என்றும் பார்க்கலாம்.

கடவுளை பலப்பெயர்களில் அழைத்தாலும் , பல உருவங்களில்  வழிப்பட்டாலும்  அவர்  ஒருவராய் இருக்கிறார்.
அவர் இருக்கிறவராக இருக்கிறார், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்;
அவர் ஒளியாயிருக்கிறார், ஆவியாயிருக்கிறார்,அன்பாயிருக்கிறார், அதரிசமானவருமாயிருக்கிறார், ஆதியும் அந்தமும் இல்லாதவர்.  
வானங்களும் வானாதிவானங்களும் அவரைக் கொள்ளக்கூடாதிருக்க, அவரே வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர்!
அந்த அன்பான கடவுளே சகலத்தையும் படைத்தவர் - வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவர், அவரே  தூதர்களையும், சகலஜீவராசிகளையும், மனிதர்களையும் படைத்தவர்.
அந்த ஒரே காணக்கூடாத தேவன் தம்முடைய ஒரே குமாரன் மூலமாக தன்னை வெளிப்படுத்தினார், அவரின் குமாரனான இயேசுகிறிஸ்துவே ஆதிமுதலிலிருந்து தேவனோடுயிருந்தவர், தேவனாயிருந்தவர்.

-  மனிதர்களை பாவத்திலிருந்து விடுவிக்க இறைவன் தம்முடைய குமாரனை மனித  உருவெடுத்து மனிதமாம்சத்தில் வெளிப்படப்பண்ணினார் - அவரே இயேசுகிறிஸ்து!

- அண்ட சராசரங்களும் கொள்ளக்கூடாதவரும், வானாதிவானங்களையும், பூமியையையும் நிரப்புகிறவர் மனிதர்கள் மேல்வைத்த அளவற்ற அன்பினால், தம்முடைய குமாரனை மனுவுருவெடுக்க வைத்தார்.

- அவருடைய குமாரனான இயேசுகிறிஸ்து தம் மகிமையை இழந்து மனிதர்களுக்காக மனிதனானார், நம்முடைய துக்கத்தையும், வேதனையையையும் பார்த்து அவர்களுக்கு நிரந்தர சந்தோஷத்தையும், நித்திய வாழ்வையும் கொடுக்க பரலோகத்தை விட்டு,  மனிதர்களுக்கும், இறைதூதர்களுக்கும் காணப்படும்படி  இறைவனோடிருந்தவர் ,  இறைவனிடத்திலிருந்து இறங்கிவந்தார் - அவரே இயேசுகிறிஸ்து.

இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதலையும்,
சிறுமையானவர்களுக்கும்  ஆறுதலையையும், ,
பாவிகளை பாவத்திலிருந்து விடுதலையளிக்கவும்,
எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைக்கவும்,
மரணத்திலிருந்து  ஜெயத்தை கொடுக்கவும்,  
மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்படவும்,
 சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிக்கவும்,
 சிறுமைப்பட்டவனுக்குக் அவரே அடைக்கலமாகவும்,
நெருக்கப்படுகிறவர்களுக்கு அவரே தஞ்சமாகவும்,
 ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்யவும்,
 சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யவும்,
மறைவாயிருந்த மகிமை வெளிப்பட்டது ....
காணக்கூடாதவர் தம் குமாரன் மூலமாக காணப்பட்டார் .....

இந்த இயேசுகிறிஸ்துவினிடத்தில்  விசுவாசம் வைத்து, அவரிடம் உங்களுடைய பாவங்களை சொல்லி விட்டுவிட்டு, அவரோடு அனுதினமும் பேசி, நெருக்கமான உறவு வைத்திருந்தால் அவர் உங்களுக்கு சமாதானமும், சந்தோஷமும் கொடுப்பார். அவரே நம் இருதயத்தை பிராகாசிப்பவர், செத்த நம் வாழ்க்கைக்கு ஜீவனைத்தருகிறவர்,  வேதனையான, துக்கம்நிறைந்த நம் மனதுக்கு அவரே ஆறுதல் தருகிறவர்.

இறைவன் நம்மை படைத்ததின் நோக்கம் நாம் இந்த உலக வாழ்வை முடித்து, மண்ணோடு மண்ணாக மாறவேண்டுமென்பதற்க்காக அல்ல. நம்முடைய உலக வாழ்விற்க்கு பிறகு நமக்கு இன்னோரு அழியாத, இறைவனால் கட்டப்பட்ட புது உலகத்தையும், வானத்தையும்  வைத்திருக்கிறார் , அவரை விசுவாசித்து அவரோடு அனுதினமும் வாழ்பவர்கள்,  இறைவனால் உண்டுபண்ணின அந்த அழியாத நகரத்தில் நுழையமுடியும், அந்த புது  நகரத்தில் எப்போதும் தேவனோடு வாழ்வார்கள், சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

அங்கே இறைவன் தாமே நம்முடைய கண்ணீர் யாவையும் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை;அங்கே  நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

இந்த இறைவன் உங்களுக்கு தேவையா?  அவருடைய குமாரனை நோக்கி - இயேசுகிறிஸ்துவே நீர்  என் வாழ்க்கைக்கு தேவை என்று சொல்வோமா?

Popular Posts