- தாவீது இரத்தம் சிந்தினவன் என்பதால் தேவன் அவனை ஆலயம் கட்ட அனுமதி கொடுக்கவில்லை. அவன் அனேகரின் இரத்தத்தை சிந்தியிருந்தான். அதுபோல புதிய ஏற்பாட்டில் தன் சகோதரனை பகைக்கிறவன் மனுஷ கொலைப்பாதகனாயிருக்கிறான், அப்படிப்பட்ட கொலைகாரன் ஒரு ஆலயமாக மாற முடியாது. சாலோமோன் என்றால் சமாதானத்தின் புருஷன்; எழுத்தின் படி ஒரு ஆலயம் கட்டவே ஒரு சமாதான புருஷனாக இருக்க வேண்டுமென்றால், பரலோகத்தில் ஆலயமாக மாறப்போகும் நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும்.
- நீ பெரியவனா, நான் பெரியவனா என்று போட்டியிடுவதை விட; நீ சிறியவனா, நான் சிறியவனா என்று போட்டியிட வேண்டும், நீ பரிசுத்தவனா, நான் பரிசுத்தவானா என்று போட்டியிட வேண்டும், எல்லாவற்றிலும் தாழ்மையையும், தேவ அன்பையும் வெளிப்படுத்த வேண்டும்.
- ஒவ்வொரு பிறந்த நாளிலும் நாம் நினைக்க வேண்டியது இன்னும் எனக்கு வாழ்நாள் எத்தனை வருஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதற்க்குள் நான் பரிசுத்தமாக வேண்டுமே என்ற வாஞ்சை வேண்டும்.