23 August 2020

தேவகுமாரன் இயேசுகிறிஸ்து ஏன் மரித்தார் - நற்செய்தி

ஆதியில்  தேவன் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினார்.

தேவன் தாமே தம்முடைய சாயலில் மனிதனையும் படைத்தார். அவர் படைத்த அந்த  மனிதனோடு அனுதினமும் உறவாடிவந்தார். ஒருநாள் அந்த மனிதன் தேவனின் வார்த்தைக்கு கீழ்படியாமல் போனதினிமித்தம் தேவனின் சமுகமும், ஜீவ விருட்சம் இருந்த  ஏதேன் தோட்டத்திலிருந்து அவன் துரத்தப்பட்டான். ஆதியாகமம் 1-3

அந்த முதல் மனிதனின் பெயர் ஆதாம், அந்த ஆதாம் என்ற ஒரு மனிதனின் மீறுதலினாலே பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்து, ஆதாமின் வழியில் வந்த அனைவரையும் அதாவது ஆதாம் முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய் பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுக்கொண்டது. ரோமர் 5

ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.
மனிதனின் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமில்லை; அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது. ஏசாயா 1

நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். யூதர்களும், கிரேக்கர்களும், உலகத்தார் யாவரும் பாவத்திற்க்குட்பட்டவர்களாய் வாழ்ந்துவந்தார்கள். அந்தபடியே: நீதிமான் ஒருவனாகிலுமில்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத்தேடுகிறவன் இல்ல; எல்லோரும் வழிதப்பி, ஏகமாய்க்கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனாகிலும் இல்லை!  ரோமர் 3

தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை, நாமோ இருளாயிருக்கிறோம்.
தேவன் பரிசுத்தராயிருக்கிறார், அவருடைய பிள்ளைகளான நாமோ பாவஞ்செய்து,  பரிசுத்தமிழந்து, தேவமகிமையற்றவர்களாகி தேவக்கோபாக்கினைக்கு கீழாக வாழ்ந்து வந்தோம்.
 

ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிற தேவன் தம்முடைய ஒருபேறான குமாரனை உலகத்தில் அனுப்பி, அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

தேவன் அன்பாயிருக்கிறார் என்று நாம் அறிந்ததே. அன்பாயிருக்கிற தேவன், பாவத்திலும் மரணத்திலும் அகப்பட்டு விடுபட வழிதெரியாமல் தவித்துக்கொண்டு, கதறிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இரக்கம்பாராட்டாமலிருப்பாரா? ஆம் அளவில்லா இரக்கம்பாராட்டினார்....!!! எப்படி?! தம்முடைய ஒரே பேறான  குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

பாவிகளாகிய நாம் குமாரனாகிய கிறிஸ்துவுக்குள்  தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். பாவங்களினாலேயும், மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த நம்மை அக்கிரமங்களெல்லாவற்றையும் நமக்கு  மன்னித்து கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.

அந்த குமாரனனவர் எப்படிப்பட்டவர்

  • மாம்சத்திலே வெளிப்பட்ட தேவன்
  • இவர் தேவனின் மகிமையின் பிரகாசமும், தேவனின் தன்மையின் சொருபமுமானவர்.
  • இவர் அதரிச தேவனின் தற்சுருபமானவர்.
  • ஆதியிலிருந்தே தேவனோடிருந்தவர், தேவனாயிருந்தவர்.
  • தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் இந்த குமாரனுக்குள் வாசமாயிருக்கிறது.


இந்த குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு -

  • நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் ;
  • குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும், குமாரன்  அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
  • ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.
  • இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
  • தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம்.
  • குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்.  
  • ஜீவனும், அழியாமையும், தேவனிடத்தில் சமாதானமுமாம்.


நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார். தேவன்  ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

எபிரெயர் 10:4 அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே, அப்படி வருஷந்தோரும் இடைவிடாமல் செய்துவரும் பலியினால் யாருடைய மனச்சாட்சியும் பூரணப்படவில்லை, அவர்களது மனச்சாட்சியே அவர்களுக்கு  பாவங்களுண்டு என்ற குற்றயுணர்வு  அவர்களுக்கு இருந்தது. Hebrews 10:1-4 அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம். எபிரெயர் 9:9  

மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக்  தேவன் கட்டளையிட்டார்;  ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.லேவியராகமம் 17:11

இயேசுகிறிஸ்துவானவரே நம்முடைய பாவத்தை சுமந்தார் என்று விசுவாசியாவிட்டால் நாம் நம்முடைய பாவங்களிலேயே சாவோம், நிவாரணி ஒன்றுமே கிடையாது. John 8:24, I Corinthians 15:17  அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழிங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாம்மேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. Acts 4:12

தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து நமது பாவத்திற்க்காக பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு முன்றாம் நாள் உயிர்ந்தெழுந்தார், அநேகருக்கு பிரட்சேசமாக தன்னை உயிரோடுயிருக்கிறவராகவும்  காணப்பட்டார்  - இதுவே சுவிஷேசத்தின் விசுவாசத்தின் வார்த்தை!  1  Corinthians 15:1-11

Popular Posts