குஜராத் மாநிலம் அலகாபாத் நகரைச் சார்ந்தவர் சந்திரகாந்த் செளதாலா. இவர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர், இவர் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். ஒருமுறை கிதியோனியர்கள் அகாமதாபாத் நகரில் உள்ள பள்ளிகளில் வேத புத்தகத்தை கொடுத்தனர் அதைப் பெற்றுக் கொண்ட பிள்ளைகளின் கைகளில் இருந்த வேத புத்தகத்தை செளதாலாவும், அவரது நண்பரும் வலுக்கட்டாயமாக பறித்து கிழித்து தீயிட்டு எரித்தனர். இதைக்கண்ட கிடியோனியர்கள் இவரின் மாற்றத்திற்காக ஜெபிக்க ஆரம்பித்தனர்.
அவர் பல நாட்களாக பகலும் இரவிலும் தூக்கமின்றி அவதிப்பட்டார், பல மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்றும் சரியாக தூங்க முடியவில்லை. எந்தவித பலனும் இல்லை, எனவே அவரது நண்பர்கள் நல்ல ஒரு மன நல மருத்துவரை பார்க்க அறிவுரை சொன்னார்கள். மருத்துவர் அவரிடம் பலகாரியங்களை கேட்டு அறிந்து ஒரு வெள்ளைக் காகிதத்தை கொடுத்து கடந்த சில மாதங்களாக அவர் செய்த ஒவ்வொரு செயலையும் தெளிவாக எழுதும்படி சொன்னார், அவர் அப்படி எழுதி மருத்துவரிடம் கொடுத்தார். அதில் வேத புத்தகம் கிழித்து எறிந்த செய்தியும் இடம் பெற்றிருந்தது. மருத்துவர் அதை வாங்கிப் பார்த்தார் வேத புத்தகம் கிழித்து எறிந்த செய்தி தவிர மற்ற எல்லாவற்றையும் பேனாவால் வெட்டிவிட்டு, நீ கிழித்தெறிந்தது போன்ற வேத பிரதி ஒன்றை வாங்கி படி அப்பொழுது உனக்கு தூக்கம் வரும், இது தவிர வேறு மருந்து கொடுக்கத் தேவையில்லை என்று அறிவுரை கூறி அனுப்பினார்.
செளதாலா அகமதாபாத் நகரிலுள்ள வேதாகமப் புத்தகக் கடைக்குச் சென்று நீலநிற வேதபுத்தகம் தருமாறு கேட்டார். அந்த புத்தகம் எங்களிடம் இல்லை என்று கூறிய புத்தகக் கடைக்காரர், கிதியோனியரை தொடர்பு கொண்டு ஒரு நீல நிற புதிய ஏற்பாடு கொண்டுவரச் செய்து அதை அவருக்கு அன்பளிப்பாக கொடுக்க செய்தார். அதைப் பெற்றுக்கொண்டு வீடு சென்று வாசிக்கத் தொடங்கினார். சிறிது நேரத்தில் தம்மை அறியாமலேயே தூங்கிவிட்டார் அதைக் கண்ட அவரது தந்தை நேராக மருத்துவரிடம் சென்று நீங்கள் என் மகனுக்கு என்ன மருந்து கொடுக்கிறீர்கள் பல நாட்களாக தூக்கமின்றி அவதிப்படுபட்டவன் இப்பொழுது நன்றாக தூங்குகிறான் என்று கூறினார். அதற்கு மருத்துவர் அவன் கிழித்து எறிந்த வேத புத்தகத்தை வாங்கிப் படிக்கச் சொன்னேன், இப்பொழுது நல்ல தூக்கம் வருகிறது என்று செளதாலா கூறினதாக சொன்னார். தொடர்ந்து இந்தப் புத்தகத்தினை குடும்பத்தினர் அனைவரும் படித்து கிறிஸ்து இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு முழுக் குடும்பத்தினரும் ஆண்டவருக்கு சாட்சியாக வாழ்ந்து வருகின்றனர். தேவனுக்கே மகிமை!
நீங்களும் இயேசுகிறிஸ்துவின் அன்பை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோன் என்ற ஸ்தாபனத்தில் தனியாகவோ அல்லது குடும்பமாக இணைந்து, இலவசமாக அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் பைபிளின் புதிய ஏற்பாட்டை இயேசுவின் அன்பை அறியாத மக்களுக்கு கொடுக்க விரும்பினால் , கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில் உள்ள கிடியோன் முகாமில் விவரங்களை பெறலாம் அல்லது உங்களின் சபை போதகரை அணுகலாம் அல்லது என்னை தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:
Phone: 91-984-9991758
91-040-64598883
91-040-64537773
E-Mail: tgi.in@gideons.org.in
Address: The Gideons International In India
Plot# 140, Maithri Enclave,
J. J. Nagar Colony P.O,
Near Indus World School,
Yapral, Secunderabad - 500 087
Andhra Pradesh,
India
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்;தேவனே,நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.சங்கீதம் 51:17
20 September 2020
தூக்கமின்மையால் அவதிப்பட்ட சகோதரனுக்கு வேத வார்த்தைகள் தூக்கத்தை கொடுத்தன!
Popular Posts
-
பிசாசானவன் அக்கினியாஸ்திரத்தை வீசும்போதும்,பலவீதமான சோதனைகளின் வழியாக நாம் கடக்கும் போது தான், சொல்லிமுடியாத சந்தோஷத்தை விசுவாசப்பிள்ளைகளுக...
-
மீகா 2:2 வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையு...
-
வேதாகமம் ஒரு கண்ணோட்டம் நன்றி: சகோ. D.பாலச்சந்திரன் Bro.Yesudas Solomon http://wordofgod.in/