13 September 2020

மருத்துவ மாணவரின் மனமாற்றம் உண்மையான கடவுளை தேடி...

பன்னீர்செல்வம் என்பவர் தஞ்சாவூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 1997ஆம் ஆண்டில் மருத்துவம் பயின்று வந்தார். உண்மையான இறைவன் ஒருவர் இருப்பாரானால் தம்முடைய தீய வாழ்க்கையில் மாற்றட்டும் என்று சவால் விடுவது அவருடைய வழக்கமாக இருந்தது. அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறாத தினால் கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொல்லுகின்ற இயக்கத்தில் இணைந்தார்.

கடவுள் இல்லை என்று சொல்லுகிற எல்லாப் பத்திரிகைகளுக்கும் சந்தாதாரராக மாறினார். இவைகள் எல்லாம் இவருக்கு மன சமாதானத்தை கொடுக்க வில்லை ஆனால் உள்ளான மனிதனில் ஒரு உண்மையான உயிரோடு இருக்கிற ஆண்டவர் உண்டு என்று விசுவாசித்தார்.

தஞ்சாவூரில் உள்ள கிதியோன் இவர்கள் அவருக்கு நீல நிற ஆங்கில வேத புத்தகம் ஒன்றை இலவசமாக வழங்க நேர்ந்தது ஆவலோடு புத்தகத்தை திறந்தபோது ஆங்கிலம் வழியாக திருமறை செய்திகளை அறிந்துகொள்வது கடினம் என கண்டு கொண்டார். தொடர்ந்து பக்கங்களைப் புரட்டியபோது கடைசி பக்கத்தில் பெயரையும் தேதியும் எழுதும் பக்கத்தைப் பார்த்து இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்வதற்கு முன்பாகவே தாம் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டதாக எழுதிவிட்டார்.

அதை தொடர்ந்து ஓர் தெய்வீக வல்லமை அவரில் கிரியை செய்தது என்று கூறினார் தொடர்ந்து நண்பர்களின் அழைப்பிற்கு இணங்கி Evangelical union கல்லூரி மாணவர்களுக்காக நடத்தின கூடுகையில் கலந்து கொண்டார். இயேசு கிறிஸ்துவை குறித்து அதிகமாக அங்கு கேட்டறிந்தார்.அங்கு யாரோ ஒருவர் கொடுத்த கிதியோன் தமிழ் புதிய ஏற்பாடு அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் சக மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு வினியோகம் செய்வதற்கு உதவி புரிந்தார்.

தொடர்ந்து கிதியோன் இயக்கத்தில் இணைந்து ஊழியம் செய்யும் வாஞ்சை உருவானது இந்த நல்ல வாய்ப்பு கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன் c.s.i. மார்த்தாண்டம் மருத்துவமனையில் பணிபுரிந்த போது மார்த்தாண்டம் கிபியோனியர் முகாமில் 2007 ஆம் ஆண்டு இணைந்தார். 2008 ஆம் ஆண்டு நடந்த போதகர்களின் பாராட்டு விழாவில் கமல் சாட்சியை கூறினார் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.

 நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
           
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

Popular Posts