சம்பத்குமார் நாயுடு ஒரு உறுதியான இந்து குடும்பத்தில் பிறந்தார். அவரது குழந்தைப் பருவம் துக்கம் நிறைந்ததாகவே இருந்தது. அவரது ஒரே ஆறுதல் வாழ்க்கையில் கிதியோனியர்களால் கொடுக்கப்பட்ட வேதபுத்தகமாகவே இருந்தது.
வேத புத்தகத்தை ஆவலோடு திரும்பத் திரும்ப வாசித்தபோது 1982 ஆம் ஆண்டு தம்முடைய வாழ்வின் இயேசுகிறிஸ்துவிற்கு ஒப்புக்கொடுத்து மறுபிறப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொண்டார் வேத புத்தகத்தை தொடர்ந்து வாசித்தபோது ஆண்டவர் பலர் வேத சத்தியங்களை அவருக்கு வெளிப்படுத்தி கொடுத்தார். அவை ஒவ்வொன்றும் அவருக்கு புதிதாக இருந்தது அவருடைய குடும்பத்தினருக்கு இவர் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கவில்லை. இவ்வாறு கிறிஸ்துவத்தை பின்பற்றுவது ஒரு குற்றம் என்றும் அவ்வாறு கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களை தாழ்ந்த ஜாதியார் என்றும் கருதினர்.
தொடர்ந்து வேதத்தை வாசித்தபோது மத்தேயும் 19:29 ஆம் வசனம் அவரது கவனத்தை ஈர்த்தது "என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது சகோதர சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியாவது, பிள்ளைகளையாவது இழந்து விட்டவன் எவனோ அவன் நூறத்தனையாக அடைந்து நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்" என்ற வசனம் இவரை ஆறுதல் படுத்தியது.
இயேசு கிறிஸ்துவின் அன்பானது தந்தையைப் போன்ற அன்பும், தாயைப் போன்ற பரிவும் அவரது வழிகாட்டியும் நண்பனும் ஆக இந்த கடினமான பாதையில் இலகுவாக நடத்தியதாக அவர் கூறுகின்றார். அவரின் நாட்களில் இயேசு கிறிஸ்துவினால் வரும் நீடிய ஆசீர்வாதங்களை பிறரோடு பகிர்ந்து வருகின்றார். அன்னார் இன்று கிறிஸ்துவ தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனத்தின் நிறுவன தலைவராகவும் பணியாற்றி வருகின்றார். இயேசு கிறிஸ்துவின் அரசு கட்டப்படுவதில் ஆண்டவர் அவரை வல்லமையாக உபயோகித்து வருகின்றார். கர்த்தருக்கே கனமும் மகிமையும் உண்டாவதாக இவ்வண்ணமாக தேவனுடைய ராஜ்யம் கட்டப்படுவதில் பங்கு கொண்டுள்ள கிதியோனியருக்கும் நன்றியை அவர் சொல்லுகிறார்.
நீங்களும் இயேசுகிறிஸ்துவின் அன்பை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோன் என்ற ஸ்தாபனத்தில் தனியாகவோ அல்லது குடும்பமாக இணைந்து, இலவசமாக அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் பைபிளின் புதிய ஏற்பாட்டை இயேசுவின் அன்பை அறியாத மக்களுக்கு கொடுக்க விரும்பினால் , கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில் உள்ள கிடியோன் முகாமில் விவரங்களை பெறலாம் அல்லது உங்களின் சபை போதகரை அணுகலாம் அல்லது என்னை தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:
Phone: 91-984-9991758
91-040-64598883
91-040-64537773
E-Mail: tgi.in@gideons.org.in
Address: The Gideons International In India
Plot# 140, Maithri Enclave,
J. J. Nagar Colony P.O,
Near Indus World School,
Yapral, Secunderabad - 500 087
Andhra Pradesh,
India
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்;தேவனே,நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.சங்கீதம் 51:17
19 September 2020
நீல சிவப்பு பச்சை நிற சிறிய புத்தகங்களால் மாற்றுருவாக்கம்!
Popular Posts
-
பிசாசானவன் அக்கினியாஸ்திரத்தை வீசும்போதும்,பலவீதமான சோதனைகளின் வழியாக நாம் கடக்கும் போது தான், சொல்லிமுடியாத சந்தோஷத்தை விசுவாசப்பிள்ளைகளுக...
-
மீகா 2:2 வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையு...
-
வேதாகமம் ஒரு கண்ணோட்டம் நன்றி: சகோ. D.பாலச்சந்திரன் Bro.Yesudas Solomon http://wordofgod.in/