13 September 2020

என் கர்த்தர் என் தேவைகளை சந்திப்பார்!

 இராமேஸ்வரத்தில் வாழ்ந்து வந்த அந்தணரான சிவரான் என்பவரின் மகன் நம்பு நாராயணன் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் படித்து வந்தார். ஒரு நாள் தூத்துக்குடி கிதியோனியர் முகாம் வ.உ.சி. கல்லூரியில் வேதபுத்தக வினியோகம் செய்வதற்கு ஒழுங்கு செய்திருந்தனர். அவர்கள் நம்புவுக்கும் ஒரு பிரதியை கொடுத்து வாசிக்கும்படி உற்சாகப் படுத்தினார்கள். இது கிறிஸ்துவர்களின் புனித நூல் என்பதையறிந்து ஏதேச்சையாக திறந்து வாசித்தபோது யோவான் 3:16 ஆம் வசனத்தை வாசிக்க் நேர்ந்தது.
 
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."

அதே அதிகாரத்தில் மெய்யாகவே, மெய்யாகவே என்ற வார்த்தை அவருக்கு ஜீவ நம்பிக்கையைக் கொடுத்தது. புதிய ஏற்பாட்டு தூர கால சம்பவங்களை வாசித்தபோது அதைக் கடவுள் சமீபமாக கொண்டு வந்தார். தொடர்ந்து வேதபுத்தகத்தை வாசித்தபோது ஏரேமியா 15:16-ம் வசனத்தின் சாப்பிடுகிற அனுபவம் போல் இருந்தது. வேதபுத்தகத்தை இன்னும் கருத்தாய்ப் படிக்க ஆரம்பித்தார்.

எபி. 12:!-ஆம் வசனத்தை வாசித்த போது யாரோ ஒருவர் கூட இருப்பது போனற உணர்வு ஏற்பட்டது. ஏரேமியா 17:9- ஆம் வசனத்தின்படி தான் பாவி என்ற உணர்வு ஏற்பட்டது. யோவான் 3:17,18 அவர் மூலமாக உலகம் இரட்சிக்கப்பட வேண்டும் , அவரை விசுவாசியாதவர்கள்  ஆக்கினைத்தீர்ப்படைவார்கள் என்பதையும் பார்த்தபோது நம்பு உள்ளத்தில் மன அமைதியை இழந்தார். யோவான் 3-ஆம் அதிகாரத்தை மீண்டும் வாசித்தபோது மெய்யாகவே, மெய்யாகவே என்ற வார்த்தை அவரை இன்னும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது. அவருடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைச் சொந்த இரட்சராக ஏற்றுக்கொண்டார்.

விடுமுறை நாட்களில் இல்லம் சென்ற போது, தங்கள் வழக்கத்தின்படி நெற்றியில் அணியும் விபூதி இல்லாததைக் கண்ட மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். இன்று மரித்தால் எங்கே போவாய் என்ற கேள்வியைக் கோவிலில் வேலைபார்த்த தாத்தவிடம் கேட்டபோது அவர் பயந்து தனக்குத் தெரியவில்லை என்று கூறினார். ஆனால் ஆண்டவர் தமக்கு எபிரேயர் 2:14, 15-ஆம் வசனத்தின்படி மரண பயத்திலிருந்து விடுதலை கொடுத்ததாகக் கூறினார். நம்புவின் தந்தை ஏன் திருநீறு பூசவில்லை எனக் கேட்டபோது, தைரியமாக இயேசுவை வாழ்வில் பின்பற்றுவதாகக் கூறினார்.

எனவே இவரது தந்தை இவரை நான்கு காரியங்களை செய்ய சொல்லி வீட்டை விட்டு துரத்தினார். அவையாவன:

1. வேதபுத்தகத்தை படித்தது தவறு என்று சொல், இந்து தெய்வங்களை நமஸ்காரம் பண்ணி மன்னிப்புக் கேட்க வேண்டும்.
2. மூன்று தங்கைகளின் திருமணத்தை யார் நடத்தி வைப்பார்கள்?
3. நம்பு என்ன செயதாலும் பரவாயில்லை, வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்தாலும் அவரை ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் வேதபுத்தகத்தை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றும் கூறினார்.
4. நம்பு அவருக்குப் பிறக்கவில்லை என்றும் ஒரு கிறிஸ்தவனுக்கு தான் பிறந்திருக்கிறாய் ஆதாலால் வீட்டை விட்டு வெளியேறு என்று கூறினார்.

இந்த வேளையிலும் யோவான் நற்செய்தி நூலை வாசித்தபோது 14-ஆம் அதிகாரம் 27-ஆம் வசனத்தின்படி தெய்வீக சமாதானத்தினால் நம்புவை ஆண்டவர் ஆட்கொண்டார்.

எனவே வீட்டைவிட்டு வெளியேறி தூத்துக்குடி வந்தார். அங்கு பேராசிரியர் ஜவன் பாலசிங் ( காமராஜ் கல்லூரி ) என்பவரது வீட்டில் தங்கினார். அடுத்தநாளே அவரது அப்பா அங்கு வந்து பேராசிரியரைத் திட்டினார். தொடர்ந்து அப்பேராசிரியர் இறைவாழ்வு, கிறிஸ்தவ அன்பு, நமது எல்லா தேவைகளுக்கும் ஆண்டவரைச் சார்ந்திருக்குபோது ஆண்டவர் எல்லா தேவைகளையும் சந்திப்பார் என ஊக்குவித்தார்.

அநேக வருடங்கள் அவரது தகப்பனார் பேசாமல் இருந்தார். பின்னர் பேசினார். கல்லூரிப் படிப்பை முடித்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் இணைந்து மேற்கு வங்காளத்தில் 4 வருடங்கள் பணி செய்தார். பின் துபாய் நாட்டில் 6 வருடங்கள் பணிபுரிந்தார். சகோதரிகள் 3 பேருக்கும் திருமணம் முடித்து வைத்தார். இவ்வேளையில் தாயார் சுகவீனமாக உணர்வற்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

தாயாருக்காக ஜெபித்தபோது இயேசு அற்புத சுகம் தந்தார். இதனால் இரண்டு தம்பிகளும் இரட்சிக்கப்பட்டனர். மூன்று தங்கைகளும் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. துபாய் பட்டணத்திலிருந்து இந்தியா வந்தார். ஆண்டவரின் அழைப்பை உணர்ந்தார் ஏசாயா 6:8-ன் படி " யாரை அனுப்புவேன்? யார் நமது காரியமாய்ப் போவான் "  என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டு பி.எஸ்.என்.எல் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு சுவிசேஷ வேலையை செய்து வருகிறார்.

கிதியோன் இயக்கத்திற்க்கு நன்றி கூறுகின்றார்.

நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
            
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

Popular Posts