மாதவி என்பவர் ஒரு இந்து அந்தணர் குலத்தில் பிறந்து வளர்க்கப்பட்டார். தனது குழந்தை பருவத்தையும், இளம்பருவத்தையும் ஒடிசா மாநிலத்தில் செல்விட்டார். ஆனால் அவரது தந்தையின் தாயார் ( பாட்டி ) கர்த்தரை அறிந்தவர். மாதவியின் தந்தை சிலை வணக்கம் செய்பவராக இந்து மதத்திலேயே இருந்து வந்ததினால், கிறிஸ்தவராய் வாழ்ந்து வந்த பாட்டிக்கு தினமும் உணவை வீட்டின் வராந்தாவில் இருந்தி பரிமாறி அவரை இரண்டாம்தமாக நடத்தி வந்தார். இச்செயல் மாதவியின் சிந்தனையை தூண்டியது. இதனால் உண்மையான இறைவன் யார் எனக் கண்டுபிடித்து, அவரையே சேவிக்க வேண்டும் என்ற அவர் தம் உள்ளத்தில் தோன்றியிருப்பதை மாதவி உணர்ந்தார். 13 வது வயதில் கிதியோனிய புதிய ஏற்பாடு கிடைக்கப்பெற்றார். அவரது ஆசிரியரின் வழிகாட்டுதலினால் ஜெபிக்கவும் கற்றுக்கொண்டார். ஆவிக்குரிய வாழ்வினில் வளர்ச்சியடைந்தார்.
ஒருநாள் திருச்சபைக்குச் சென்று விட்டு வரும்போது, தமது தகப்பனாரால் கையும் களவுமாகப் பிடிக்காப்பட்டார். அவரது தந்தை கோபத்துடன் அவரை அடித்துத் துன்புறுத்தினார். மத்தேயு 5:4,10 வசனங்களின் மூலமாக அவரது ஆசிரிய்ரால் ஆறுதல்படுத்தப்பட்டார்.
அதன்பின்னார் அவர்கள் ஒடிசா மாநிலம், பூரியிலுள்ள அவரது பாட்டியின் வீட்டிற்க்கு குடும்பமாக குடிபெயர்ந்து சென்றுவிட்டனர். அங்கும் ஒருனாள் ஓய்வு நாள் பாடசலியக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பும் வழியில் மாதவியை அவரது தந்தை வழிமறித்து அடித்து உதைத்தார். அவரது மனதை மாற்றவும் முயற்சி மேற்கொண்டர். இந்நிலையிலும் மாதவி தொடர்ந்து குளியறையில் ஒளிந்துகொ?ண்டு இரகசியமாக வேதபுத்தகத்தைப் படித்து வந்தார். பின்னர் ஆந்திராவிலிள்ள் சோதிடர் ஒருவருக்கு மாதவியைத் திருமணம் செய்து கொடுத்தனர். கணவரின் குடும்பத்தினர் மாந்திரீகம், மற்றும் சிலை வணக்கம் போன்ற பழக்கங்களுக்கு மாதவியை அடிமைப்படுத்த முயற்சி செய்தனர். இத்தகைய துயரமான நிலையிலும் மாதவி வேதபுத்தகத்தை தொடர்ந்து விடாது படித்து வந்தார்.
இவ்வேளையில் அவருடைய மாமியாருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாக மருத்துவ ஆய்வு மூலம் தெரிய வந்தது. மரித்துகொண்டிருக்கும் வேளையில் மாதவியின் தவியால் அவர்து மாமியார் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். தமது மகள்களையும் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக எற்றுக்கொள்ள உற்சாகப்படுத்தினார்கள்.
கடவுள் மாதவியின் கண்வனைத் தொட்ட்போது, அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சராக ஏற்றுக்கொண்டார். கர்த்தர் மாதவியின் அழுகையை ஆனந்தகளிப்பாக மாற்றினார். கர்த்தர் அருளிய சந்தோஷத்திற்கு எல்லையில்லை. இன்று தம்முடைய முழு குடும்பமும் மாதவியின் கணவரின் சகோதர சகோதரிகளும் கர்த்தரை சேவிக்கின்றார்கள். மாதவி சாராள் எனவும், அவரது கணவர் ஆபிரகாம் எனவும் அழைக்கப்படுகின்றனர். கர்த்தருக்கே மகிமை, தம் இருதயம் நிறைந்த நன்றியைக் கிதியோனியரின் ஊழியத்திற்க்கு செலுத்துகிறார்.
நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பினால் கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில் உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:
Phone: 91-984-9991758
91-040-64598883
91-040-64537773
E-Mail: tgi.in@gideons.org.in
Address: The Gideons International In India
Plot# 140, Maithri Enclave,
J. J. Nagar Colony P.O,
Near Indus World School,
Yapral, Secunderabad - 500 087
Andhra Pradesh,
India
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்;தேவனே,நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.சங்கீதம் 51:17
Popular Posts
-
பிசாசானவன் அக்கினியாஸ்திரத்தை வீசும்போதும்,பலவீதமான சோதனைகளின் வழியாக நாம் கடக்கும் போது தான், சொல்லிமுடியாத சந்தோஷத்தை விசுவாசப்பிள்ளைகளுக...
-
மீகா 2:2 வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையு...
-
வேதாகமம் ஒரு கண்ணோட்டம் நன்றி: சகோ. D.பாலச்சந்திரன் Bro.Yesudas Solomon http://wordofgod.in/