13 September 2020

அவருடையவார்த்தை வெறுமனே திரும்பாது!

டெல்லியிலுள்ள கிதியோனியர்களோடு இணைந்து கிதியோனின் 3 அங்கத்தினர்கள் புது டெல்லியிலுள்ள பவிச்சா சமுதாய கல்லூரிக்கு புதிய ஏற்பாடு வேத வினியோகத்திற்க்காகச் சென்றிருந்தனர்.

அங்கே ஏறக்குறைய  20 மேற்ப்பட்ட 300 மாணவிகள் அமர்ந்து தொழிற்கல்வி பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள். மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு ஒரு கிதியோனில் உள்ளவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அவ்வாறு ஆண்டவரின் அன்பைக் குறித்துப் பகிர்ந்து கொண்ட வேளையில், அக்கல்லூரியின் ஆட்சிக் குழுத்தலைவராகிய பாரதி கிதியோனிர்களிடம் தனக்கும் ஒரு சாட்சி கூற வாய்ப்பளிக்க வேண்டி விண்ணப்பித்தார்.

"20 வருடங்களுக்கு முன்னால் கிதியோனியர்கள் வேதபுத்தகம் வினியோகம் செய்தபோது தாமும் ஒரு பிரதியை பெற்றுக்கொண்டார். அதைத் தமது வீட்டிற்கு எடுத்துச் சென்று வாசிக்க அரம்பித்தார். வேதத்தின்  மகத்துவத்தினால் தொடப்பட்டவராய் அதை தனது பெற்றோர்களுக்கும் காலை ஆகாரத்தின் போது பகிர்ந்து கொண்டார். அந்தண குல பூசாரியாக இருந்த அவரது தாத்தா  அந்த புத்தகத்தை வலுக்கட்டாயமாகப் பெற்று அதை அழித்தார்.

ஆனால் பாரதி தன்னோடு வேதபுத்தகத்தைப் பெற்றுக் கொண்ட தனது உறவு பெண்ணிடம் சென்று அதை தொடர்ந்து இரகசியமாக படித்து வந்தார். அநேக வருடங்களுக்குப் பிறகு பாரதியின் தாத்தா  காலமானார். எனவே இப்போது பாரதி பயமின்றி வேதபுத்தகத்தை  வாசித்து நற்செய்தியைப் பெற்றோரோடு பகிர்ந்து கொண்டார்.

முடிவாக பாரதி இயேசு கிறிஸ்துவைத் தமது சொந்த இரட்சராக ஏற்றுக்கொண்டார். தொடர்ச்சியாக அவரது சாட்சியின் விளைவாக அவரது தந்தை, தாய், சகோதரனுடன், சகோதரியும் கிறிஸ்துவை தங்கள் இரட்சராக ஏற்றுக்கொண்டனர்" என்பதே அவரது சாட்சி.

"அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்க்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். ஏசாயா 55:11"

நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:  91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
           
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

Popular Posts