13 September 2020

பாக்கியலெட்சுமியின் இறைப்பணி இருளிலிருந்து ஒளியினிடத்திற்க்கு...

திருமதி பாக்கியலெட்சுமி தன் பெற்றோருக்கு 5-ஆவது குழந்தையாக பிறந்தார். முதலில் பிறந்த நான்கு குழந்தைகளும் இறந்துவிட்ட காரணத்தினால் பாக்கியலெட்சிமியை கேரள மாநிலத்திலுள்ள திருச்சூர் என்ற நகரில் அமைந்துள்ள இந்துக்கோவில் ஒன்றில் அவருடைய பெற்றோர் ஒப்படைத்துவிட்டனர்.

அக்குழந்தையை ஏற்றுக்கொண்ட கோவில் நிர்வாகிகள் அக்குழந்தையை பெற்றோரிடத்திலேயே கொடுத்து வளர்த்து தரும்படி கேட்டுகொண்டனர். அவரது இல்லத்தில் எல்லா இந்து  தேவர்களின், தேவதைகளின் படங்களும், சில சிலைகளும் இருந்த போதிலும், அவர் மன அமைதி இல்லாதவளாக இருந்தாள்.

தன்னை நேசிக்கினற சமாதானம் தரும் கடவுளைக் கண்டுகொள்ள வாஞ்சித்தாள். அவள் வளர்ந்து வரும் வேளையில் அவள் படித்த பள்ளியில் கிதியோனியர்களால் வழங்கப்பட்ட வேதபுத்தகம் ஒன்று அவளுக்கும் கிடைத்தது. அதை அவள் ஒவ்வொரு பக்கமாக தெளிவாக படிக்க ஆரம்பித்தாள். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை, பாடுகளை, உயிர்ந்தெழுதலைக் குறித்து வாசித்தபொழுது, அவளுடைய உள்ளத்தில் ஒளியூட்டபட்டவளாக, இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டாள்.

தொடர்ந்து முதலாவதாக தந்தையையும், பின்பு தாயையும் இழந்து ஆனாதையானபோது இயேசவின் அன்பு தன்னை தாங்கியதாக அவள் கூறுகின்றாள்.

1973- ஆம் ஆண்டு ஒவ்வொரு நாளும் வேத புத்தகம் தன்னோடு பேசுவதாகக் கூறினாள். திருமணத்திற்க்கு முன்பு இந்திய ராணுவத்திலுள்ள் தாதியர் பிரிவில் சேர்ந்து பணி செய்ய விரும்பினாள். திருமணத்திற்க்கு முன்பே தன் எதிர்கால கணவரிடம் வேத புத்தகத்தைப் பற்றி கூறினாள். அச்சமயம் அவளது கணவர் கப்பல் வேலை செய்து வந்தார். திருமணம் நிறைவடைந்து அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து வேதபுத்தகத்தை படித்தாள்.

அந்த வேத புத்தகத்தை ஆவலோடு கண்காணித்தாள். கப்பல் வேலைக்கு செல்லவிருந்த கணவருக்கு வேத புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினாள். நாட்கள் செல்லச்செல்ல அவரும் வேத புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தார். அவரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். தற்போது 24 வருடங்களுக்குப் பிறகு கிதியோனிய வேத புத்தகத்தை இரண்டுபேரும் இணைந்து  வழங்குகிறார்கள். தற்போது இருவரும் மங்களூரிலுள்ள கிதியோனியர்கள் முகாமில் அங்கத்தினார்கள். பாக்கியலெட்சுமி மங்களூர் மூகாமில் ஆக்ஸிலரி தலைவர் ஆவார்.

"அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்க்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். ஏசாயா 55:11"

நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
            
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

Popular Posts