கோவை மாவட்டத்தில் நெசவுத் தொழிலில் சிறந்து விளங்கும் சிறுமுகை என்னும் கிராமத்தில் செடையப்பன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு உறுதியான இந்துவாக இருந்தார்.
அவர் மட்டுமே தன் குடும்பத்தினருக்கு பணம் ஈட்டுபவராக இருந்து வந்தார். அவரது தந்தைக்கு திடீரென மூக்கில் புற்றுநோய் வந்துள்ளதாக மருத்துவர்கள் பரிசோதனை செய்து உறுதியாக சொன்னார்கள். அந்தக் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தபடியால் நல்ல மருத்துவமனையில் சிகிட்சையளிக்க முடியவில்லை.
2008-ஆம் ஆண்டு கோவை அரசு மருத்துவமனையில் சில கிதியோனியர்களும், ஆக்ஸிலரிகளும் இவரைச் சந்தித்து,அவருக்கும், குடும்பத்தினருக்கும் வேத புத்தகம் வழங்கினர். அவர்களோடு சேர்ந்து ஜெபித்து வேதத்தை வாசிக்கும்போது இந்த நோயிலிருந்து ஆண்டவர் சுகம் அளிக்க முடியும் என்று கூறினார்கள். மருத்துவர்களால் குணமாக்க முடியாத இந்த நோயை, இந்த சிறு வேத புத்தகம் எவ்வாறு குணமாக்க முடியும் என சந்தேகித்தனர்.
எனினும் வீட்டிற்கு சென்று வேத புத்தகத்தை கருத்தாய் வாசித்தனர். இயேசு கிறிஸ்துவக் குறித்து வாசித்தபோது அவர்கள் வாழ்வில் ஒரு புதிய தன்மை ஏற்பட்டது. இந்த கடவுள் எவ்வளாக நேசிக்கிறார், பாதுகாக்கிறார் என ஆச்சரியப்பட்டனர். இயேசு கிறிஸ்துவை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தனர். சில நாட்களில் செடைப்பனின் தந்தையின் மூக்கிலிருந்து சதை சுருங்கி அவர் பூரணமாக குணமடைந்தார்.
அவரின் முழுக் குடும்பமும் இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு மேட்டுப்பாளையத்திலுள்ள ஒரு திருச்சபையில் ஆண்டவரை ஆராத்தித்து வருகின்றனர்.
"அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்க்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். ஏசாயா 55:11"
நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பினால் கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில் உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:
Phone: 91-984-9991758
91-040-64598883
91-040-64537773
E-Mail: tgi.in@gideons.org.in
Address: The Gideons International In India
Plot# 140, Maithri Enclave,
J. J. Nagar Colony P.O,
Near Indus World School,
Yapral, Secunderabad - 500 087
Andhra Pradesh,
India
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்;தேவனே,நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.சங்கீதம் 51:17
Popular Posts
-
பிசாசானவன் அக்கினியாஸ்திரத்தை வீசும்போதும்,பலவீதமான சோதனைகளின் வழியாக நாம் கடக்கும் போது தான், சொல்லிமுடியாத சந்தோஷத்தை விசுவாசப்பிள்ளைகளுக...
-
மீகா 2:2 வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையு...
-
வேதாகமம் ஒரு கண்ணோட்டம் நன்றி: சகோ. D.பாலச்சந்திரன் Bro.Yesudas Solomon http://wordofgod.in/